Page Loader
பிரெஞ்ச் ஓபன்: ரோலண்ட் கரோஸ்யிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலிருந்து வெளியேறினார் ரஃபேல் நடால் 
நடால் 4 ஆம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் தோல்வியடைந்தார்

பிரெஞ்ச் ஓபன்: ரோலண்ட் கரோஸ்யிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலிருந்து வெளியேறினார் ரஃபேல் நடால் 

எழுதியவர் Venkatalakshmi V
May 28, 2024
07:06 am

செய்தி முன்னோட்டம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில், ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஃபேல் நடால் 4 ஆம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் தோல்வியடைந்தார். 3-6, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் 14 முறை பிரெஞ்சு ஓபன் வென்ற சாம்பியனை, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் தோற்கடித்தார். நடாலின் பிரெஞ்ச் ஓபன் வரலாற்றில் இது மூன்றாவது தோல்வியாகும். இதற்கு முன்னர், ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபனில், ராபின் சோடர்லிங் மற்றும் நோவக் ஜோகோவிச்சிடம் மட்டுமே தோல்வியடைந்தார். சோடர்லிங் 2009இல் நான்காவது சுற்றில் அவரை தோற்கடித்தார். ஜோகோவிச் இரண்டு முறை நடாலை தோற்கடித்துள்ளார் (கால்இறுதி, 2015 மற்றும் அரையிறுதி, 2021).

embed

ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

#SportsUpdate | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி#SunNews | #RafaelNadal | #FrenchOpen | #Tennis pic.twitter.com/6GgoGBUp5D— Sun News (@sunnewstamil) May 28, 2024