எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி
செய்தி முன்னோட்டம்
நெதர்லாந்தின் ஐந்தோவனில் புதன்கிழமை (ஜூன் 7) நடைபெற்ற எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டிகளின் இரண்டாவது ஐரோப்பிய லெக் ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிராக இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கிய இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் ஒரு கோல் கிடைத்தது.
இதன் மூலம் முதல் காலிறுதியில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றாலும், அதன் பின்னர் நெதர்லாந்தின் வேகத்தை இந்திய ஹாக்கி அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் இறுதியில் 1-4 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் தோல்வியை தழுவியதால் தங்கள் குழுவில் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பையும் இழந்தது.
இந்தியா அடுத்து அர்ஜென்டினாவை ஜூன் 8 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Netherlands comeback from behind to secure the victory against India.
— Hockey India (@TheHockeyIndia) June 7, 2023
Let's come back stronger in the next game.#HockeyIndia #IndiaKaGame #FIHProLeague pic.twitter.com/9IUOm3sWXr