Page Loader
எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 09, 2023
02:26 pm

செய்தி முன்னோட்டம்

வியாழன் அன்று (ஜூன் 8) நடைபெற்ற எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. போட்டியில் 33வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அவரது கோல் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். 39வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸும் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற, பின்னர் 59வது நிமிடத்தில் அபிஷேக் அடித்த ஃபீல்டு கோல் இந்தியா இறுதியில் 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா 14 ஆட்டங்களில் 27 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post