LOADING...
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 100 தரவரிசையில் இந்திய கால்பந்து அணி
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 100 தரவரிசையில் இந்திய கால்பந்து அணி

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 100 தரவரிசையில் இந்திய கால்பந்து அணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆடவர் தேசிய கால்பந்து அணி, சமீபத்திய பிபா உலக தரவரிசையில், லெபனான் மற்றும் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி, 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் பிறகு மார்ச் 15, 2018க்கு பிறகு, ஐந்து வருடங்கள் கழித்து, மீண்டும் இந்திய அணி உலக தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. கடைசியாக 2018இல் 99வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் பதவியேற்றபிறகு, இந்த முன்னேற்றம் நடந்துள்ளது. இதற்கிடையில் அவர் தலைமையில் பெங்களூரில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜூலை 1 ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

top 3 nations in fifa ranking

உலக தரவரிசையில் அர்ஜென்டினா முதலிடம்

பிபா உலகக் கோப்பை 2022ஐ வென்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா 13வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி, 11வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, நான்கு இடங்கள் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், விஎப்எப் ட்ரை-சீரிஸில், வியட்நாமிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, ஸ்டிமாக்கின் பயிற்சியின் கீழ், இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகரமான போட்டிகளைக் கொண்டுள்ளனர் மற்றும் 2023 இல் இதுவரை இரண்டு டிராக்கள் மற்றும் ஏழு வெற்றிகளுடன் தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.