பிரேசில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய கையோடு சர்வதேச போட்டிகளுக்கு குட்பை சொன்ன நெய்மர்
செய்தி முன்னோட்டம்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், நடப்பு உலகக்கோப்பையின் 16-வது சுற்று போட்டியில் நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து, தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் அணிக்கான அவரது 16 ஆண்டுகால பிரம்மாண்ட சர்வதேசப் பயணம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. நாக்-அவுட் போட்டியில், நார்வே அணியின் எர்லிங் ஹாலாண்ட் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களால் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரேசில் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் கோலாக மாற்றிய போதிலும், அது பிரேசிலின் தோல்வியைத் தடுக்க உதவவில்லை.
போராட்டம்
காயங்களுடன் போராடிய உலகக்கோப்பைத் தொடர்
தற்போது பிரேசில் அணியின் பயிற்சியாளராக உள்ள கார்லோ அன்செலோட்டியின் திட்டப்படி, இந்த உலகக்கோப்பைத் தொடரில் நெய்மர் மாற்று வீரராகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டார். தொடரின் ஆரம்பக் கட்டத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், தீவிரப் பயிற்சிகளுக்குப் பிறகு ஸ்காட்லாந்து மற்றும் நார்வே அணிகளுக்கு எதிரான நாக்-அவுட் போட்டிகளில் மாற்று வீரராகக் களமிறங்கி விளையாடினார். நார்வேக்கு எதிராக அவர் அடித்த பெனால்டி கோலே பிரேசில் ஜெர்சியில் அவர் அடித்த கடைசி சர்வதேச கோலாக மாறியுள்ளது. போட்டி முடிந்ததும் பேசிய நெய்மர், "நான் என்னால் முடிந்தவரை மீண்டும் மீண்டும் முயன்றேன், ஆனால் எனது சர்வதேசப் பயணம் இதோடு முடிவுக்கு வருகிறது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Moment #Neymar Broke Down in Tears 😭 After Brazil's 🇧🇷
— The 13th ١٣📜🪶Warrior (@strange16892330) July 5, 2026
Elimination From
The World Cup at The Hands of
Norway, 🇳🇴 Which Will
Be Neymar's Last
World Cup Appearance pic.twitter.com/5EXFxUAZHG
சாதனை
பிரேசில் வரலாற்றில் அதிக கோல் அடித்த சாதனையாளர்
2010ஆம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், இதுவரை 129 சர்வதேச போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்து, பிரேசில் கால்பந்து வரலாற்றில் 'அதிக கோல் அடித்த வீரர்' என்ற மாபெரும் சாதனையை தன் வசம் வைத்துள்ளார். தனது சர்வதேசப் பயணத்தில் 2013-ல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் கேப்டனாக பெற்றுத் தந்துள்ளார். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அவரது நீண்டகால கனவு நனவாகாமல் போனாலும், பிரேசில் கால்பந்தின் தசாப்த கால முகமாகத் திகழ்ந்த நெய்மரின் இந்த ஓய்வு அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.