கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி தொடர் இன்று தொடக்கம்
பிரபலமான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர், கனடாவின் டொரோண்டோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதுவார்கள். இந்த தொடரில் பங்கேற்க இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா (2,747), டி.குகேஷ் (2,747), விதித் குஜராத்தி (2,747) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். சதுரங்க போட்டிகளில் பிரபலமான இந்த கேண்டிடேட்ஸ் தொடரில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு, ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி(2,758), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா(2,804), அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ்(2,632), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா (2,789), பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா(2,760) ஆகியோரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.