LOADING...
பவுலர்களை அதிரவைத்த அதிரடி ஆட்டக்காரர்கள்! டி20 உலகக்கோப்பையில் மின்னல் வேகத்தில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!
டி20 உலகக்கோப்பையில் அதிவேக சதம் விளாசிய டாப் 5 வீரர்கள்

பவுலர்களை அதிரவைத்த அதிரடி ஆட்டக்காரர்கள்! டி20 உலகக்கோப்பையில் மின்னல் வேகத்தில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
07:46 pm

செய்தி முன்னோட்டம்

டி20 கிரிக்கெட் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தான். அதிலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சதம் அடிப்பது என்பது தனிச்சிறப்பு. குறைந்த பந்துகளில் சதம் விளாசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த டாப் 5 வீரர்களின் பட்டியலை இங்கே விரிவாகக் காண்போம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அகமது ஷெஷாத், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஒரு சிறப்பான சதத்தைப் பதிவு செய்தார். நிதானமாகவும் அதே சமயம் தேவைப்படும்போது ஆக்ரோஷமாகவும் ஆடிய அவர், 58 பந்துகளில் தனது சதத்தை எட்டி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

சதங்கள்

நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கல்லம்

தென்னாப்பிரிக்காவின் இடதுகை ஆட்டக்காரரான ரிலீ ரோசோவ், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸை ஆடினார். சிக்ஸர் மழையாகப் பொழிந்த அவர், வெறும் 52 பந்துகளில் நூறு ரன்களை எட்டி பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த அவர், 51 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிறிஸ் கெய்ல்

முதல் இரண்டு இடங்களில் கிறிஸ் கெய்ல் ஆதிக்கம்

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக்கோப்பையிலேயே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கிறிஸ் கெய்ல் தனது ஆதிக்கத்தைத் தொடங்கிவிட்டார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அந்தத் தொடக்கப் போட்டியில், 50 பந்துகளில் சதம் விளாசி வரலாறு படைத்தார். உலகக்கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவே என்பது கூடுதல் சிறப்பு. இது பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், தனது அபாரமான வலிமையால் பவுலர்களை நிலைகுலையச் செய்த கிறிஸ் கெய்ல், வெறும் 47 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார்.

Advertisement