
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி
செய்தி முன்னோட்டம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பஹரம்பூர் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார்.
பஹரம்பூர் தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
எனினும், பஹரம்பூர் தொகுதியில் தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை போட்டியிட்டு இருக்கிறார். எனவே, அதே தொகுதி அவருக்கு மீண்டும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூசுப் பதானைத் தவிர, பாலிவுட் ஜாம்பவான் சத்ருகன் சின்ஹா உட்பட பல பெரிய பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா
பிரபல டோலிவுட் நடிகர்கள் போட்டி
இந்த பட்டியலில் ஹூக்லியைச் சேர்ந்த பிரபல நடிகை ரச்சனா பானர்ஜி உட்பட பல டோலிவுட்(வங்காளத் திரைப்படத் துறை) நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். அவர் பாஜக வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜிக்கு எதிராக போட்டியிட உள்ளார்.
பணப்பட்டுவாடா சர்ச்சையில் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு அவர் வகித்த தொகுதியான கிருஷ்ணநகர் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட உள்ளார்.
மொத்தம் 18 பெண் வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரிணாமுலின் வேட்பாளர்கள் பட்டியலில் ஜூன் மாலியா, தீபக் அதிகாரி('தேவ்' என அறியப்படுபவர்)மற்றும் சதாப்தி ராய் உள்ளிட்ட பிரபல டோலிவுட் நடிகர்கள் இடப்பெற்றுள்ளனர்.