LOADING...
ஃபிஃபா உலகக்கோப்பையில் விசித்திரம்: மெக்சிகோ போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வயாக்ரா எடுத்துக்கொள்ள அனுமதி எதற்காக?
ஃபிஃபா உலகக்கோப்பையில் மெக்சிகோ போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வயாக்ரா எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதற்கான காரணம்

ஃபிஃபா உலகக்கோப்பையில் விசித்திரம்: மெக்சிகோ போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வயாக்ரா எடுத்துக்கொள்ள அனுமதி எதற்காக?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
10:05 am

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 தகுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களுக்கு, போட்டிக்கு முன்பாக வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த ஒரு விசித்திரமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டியில் உள்ள தேசிய மைதானமான அஸ்டெகா கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அசாத்திய உயரத்தால் வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான உடல் சோர்வு மற்றும் உயர நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மேலாளர் தாமஸ் துஹெல் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த வினோத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ

சொந்த மண்ணில் அசுர பலம் காட்டும் மெக்சிகோ அணி

மெக்சிகோ அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசாத்திய ஃபார்மில் உள்ளது. குறிப்பாக, இந்த அஸ்டெகா மைதானத்தில் விளையாடிய 89 போட்டிகளில் மெக்சிகோ அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதுடன், அவர்களின் கடைசித் தோல்வி 2013 இல் பதிவானது. இத்தகைய சாதனை படைத்த மெக்சிகோ அணியை அவர்களின் சொந்தக் கோட்டையில் வீழ்த்த, கால்பந்து அல்லாத வெளிப்புறக் காரணிகள் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் இங்கிலாந்து அணி நிர்வாகம் மிகவும் தீவிரமாக உள்ளது.

இங்கிலாந்து அணி

முந்தைய சுற்றின் தடுமாற்றமும் இங்கிலாந்தின் தேவையும்

இதற்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் காங்கோ குடியரசு அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி, போட்டியின் இறுதி நிமிடங்களில் கேப்டன் ஹாரி கேன் அடித்த 2 லேட் கோல்கள் மூலமாகவே 2-1 என்ற கணக்கில் போராடி வென்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே பல முன்னணி அணிகள் அதிர்ச்சித் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் தங்களது ஆட்டத்திறனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisement

விதிமுறைகள்

வயாக்ரா மருந்துக்கு வாடா (WADA) விதித்துள்ள விதிமுறைகள்

விளையாட்டு உலகில் வயாக்ரா (Sildenafil) மருந்துக்கு உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (WADA) தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து மனித உடலின் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது என்றாலும், கடல் மட்டத்தில் அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் இது வீரர்களின் ஆட்டத்திறனை பெரிய அளவில் மேம்படுத்துவதில்லை என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, தற்போதைய உயரமான சூழலை சமாளிக்க வீரர்கள் இந்த மருந்தை உட்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement