Page Loader
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் பண மோசடி!
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் பண மோசடி

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவியிடம் பண மோசடி!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 04, 2023
03:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெய பரத்வாஜிடம், வியாபாரம் என்று கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சாஹர், ஆக்ராவில் உள்ள ஹரி பர்வத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த துருவ் பரீக் மற்றும் கமலேஷ் பரீக் என்ற இருவர் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முன்பு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரியாகவும் இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அக்டோபர் 7, 2022 அன்று ரூ. 10 லட்சத்தை வாங்கிய நிலையில், இதுவரை பணத்தைத் திருப்பித் தராததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம்

முன்னதாக, 2021 ஐபிஎல் சீசனின் போது அக்டோபர் 7, 2021 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு தனது ஜெயா பரத்வாஜுக்கு தனது காதலை தீபக் முன்மொழிந்தார். தீபக் காதலை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜூன் 2, 2022 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, 2022 ஐபிஎக்கு முன்பு முதுகு வழியால் வெளியேறிய தீபக் சாஹர், அதன் பிறகு 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அப்போது மீண்டும் காயம் ஏற்பட்டு வெளியேறிய சாஹல், தற்போது வரை இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை.