Page Loader
ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்
ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்

ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 21, 2023
11:14 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 இல் டெல்லியில் நடந்த போட்டியில் டேவிட் வார்னரின் அசத்தலான அரைசதம் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தனது 59வது ஐபிஎல் அரை சதத்தை அடித்த வார்னர், இந்த சீசனில் நான்கு 50+ ஸ்கோர்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

david warner surpass rohit record

ஐபிஎல்லில் டேவிட் வார்னர் புள்ளி விபரங்கள்

வார்னர் இப்போது ஐபிஎல்லில் நான்கு சதங்கள் மற்றும் 59 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும் ஐபிஎல் 2023ல் மட்டும் 55.20 சராசரியில் 276 ரன்கள் எடுத்ததன் மூலம், 2023ல் அதிக ரன் எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அடித்த வீரர் பட்டியலில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். டேவிட் வார்னர் தற்போது கேகேஆர் அணிக்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா கேகேஆர் அணிக்கு எதிராக 1040 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ஷிகர் தவான் சிஎஸ்கேவுக்கு எதிராக 1029 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.