CT 2025: ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி பெறப்போவது யார்?
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கான் கிரிக்கெட் அணி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மதுல்லா குர்பாஸ் முதல் ஓவரிலேயே டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் 22 ரன்களில் அவுட்டானார்.
எனினும், செதிகுல்லா அடல் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்சாய் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். செதிகுல்லா அடல் 85 ரன்களும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 67 ரன்களும் எடுத்தனர்.
273 ரன்கள்
273 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
இதையடுத்து 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய கிளென் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டுகளையும், பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி குரூப் பி பிரிவில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதி வாய்ப்பை நேரடியாக உறுதி செய்துவிடும் என்பதால், யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.