ஆல்ரவுண்டர்களுக்கு அதிக இடம்; ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் முடிவடைந்தது. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஏலத்தில் ஆறு புதிய வீரர்களை வாங்கியது. இதில் ராச்சின் ரவீந்திரன் மற்றும் டேரில் மிட்செல் ஆகிய நியூசிலாந்து வீரர்களும் அடங்குவர். மேலும், முன்னர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு வாங்கியதோடு, உள்ளூர் வீரரான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான ஹார்ட் ஹிட்டிங் பேட்டர் சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணி ஏராளமான ஆல்ரவுண்டர்களுடன் வலுவானதாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பின்வருமாறு:- விளையாடும் லெவன்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா/மிட்செல் சான்ட்னர், சிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மதீஷா பத்திரனாமுஸ்தபிசுர் ரஹ்மான். ஐபிஎல் 2024 ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: ராச்சின் ரவீந்திரா (ரூ.1.8 கோடி), ஷர்துல் தாக்கூர் (ரூ.4 கோடி), டேரில் மிட்செல் (ரூ.14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ.8.40 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (ரூ.2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ.20 லட்சம்).
சிஎஸ்கே ஐபிஎல் 2024 அணிக் கலவை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இருந்தாலும், சரியான கலவையில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களும் அணியில் உள்ளனர். விக்கெட் கீப்பிங்கில் எம்எஸ் தோனியுடன் மேலும் இருவர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்கள்: எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, அவனிஷ் ராவ் ஆரவெல்லி. பேட்டர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி. ஆல்ரவுண்டர்கள்: மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ராச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர். பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் சவுத்ரி.