LOADING...
ஐபிஎல் 2026: சிஎஸ்கேவிற்கு பலத்த அடி! நட்சத்திர வீரர் விலகல்; மாற்று வீரர் யார்?
சிஎஸ்கே வீரர் நாதன் எல்லிஸ் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகல்

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவிற்கு பலத்த அடி! நட்சத்திர வீரர் விலகல்; மாற்று வீரர் யார்?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், பயிற்சியின் போது ஏற்பட்ட தொடைப்பகுதி காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே சிஎஸ்கேவின் நம்பிக்கை நாயகனாக இருந்த மதீஷா பதிரனா, ₹18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் சென்றுவிட்டார். அவருக்குப் பதிலாக டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நாதன் எல்லிஸும் தற்போது விலகியுள்ளது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாற்று வீரர்

மாற்று வீரர் யார்?

மேட் ஹென்றி: நியூசிலாந்து வீரரான மேட் ஹென்றி தற்போது அணியில் உள்ளார். இவர் புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் வல்லவர் என்றாலும், டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. ஜேமி ஓவர்டன்: இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான இவரைச் சோதித்துப் பார்க்க சிஎஸ்கே ஆலோசிக்கலாம். புதிய மாற்று வீரர்: நாதன் எல்லிஸுக்குப் பதிலாக ஏலத்தில் எடுக்கப்படாத ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது.

அட்டவணை

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவின் முதல் 4 போட்டிகள்

மார்ச் 30 அன்று குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 3 அன்று சென்னையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 5 அன்று பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 11 அன்று டெல்லியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராகவும் மோத சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, இந்த முறை ஆல்-ரவுண்டர்களை அதிகம் நம்பியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement