CSK-வும் - எம்.எஸ். தோனியும்; இன்றுடன் 16 வருடங்கள் நிறைவு
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)-இன், சென்னை சூப்பர் கிங்ஸ்-இல், 'தல' தோனி இணைந்து இன்றுடன் 16 வருடங்கள் நிறைவுற்றுள்ளது.
தோனி முதன்முதலில் 2008இல் CSK இல் இணைந்தார். தோனி தலைமையில், CSK அணி இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது.
'கேப்டன் கூல்' என அதுவரை அழைக்கப்பட்டு வந்த தோனி, அதன் பின்னர், 'தல' தோனியாக மாறினார்.
தமிழ்நாட்டின் கிரிக்கெட் ரசிகன் ஒவ்வொருத்தரின் ஆஸ்தான நாயகனாக மாறி போனார், 'தல' தோனி. சென்ற ஐபிஎல் போட்டியே அவரது கடைசி போட்டி என பலரும் கூறிய நிலையில்,'அப்படி நீங்கள்தான் கூறி வருகிறீர்கள்' என்று பதில் கூறி ஆறுதலளித்தார்.
இந்த 16 வருட நிறைவை கொண்டாடும் வகையில், CSK அணி ஒரு புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
CSK -வும்- எம்.எஸ். தோனியும்
Since 2008 and still counting.....💛
— Star Sports Tamil (@StarSportsTamil) February 20, 2024
சென்னையின் நாயகனாக தல Dhoni 2008 Auction-ல் எடுக்கப்பட்ட நாள்! 👑🥹#IPLOnStar #OnThisDay #TeamChennai #MSDhoni pic.twitter.com/30umkVfl4j