'ஐபிஎல் பார்க்குறதெல்லாம் வேஸ்ட்' என ட்விட்டரில் பதிவிட்ட நபரை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!
ஐபிஎல் 2023 தொடர் இரண்டு மாதங்கள் நடந்து ஓய்ந்துள்ள நிலையில், ஒரு ட்விட்டர் பயனர் ஐபிஎல் பார்ப்பது நேரத்தை வீணடிப்பதாக கூறியது வைரலாகி வருகிறது. இந்தியாவில் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் அதிகம். கிரிக்கெட்டை ஒரு மதம் போல் பின்பற்றுபவர்கள் பலர் இங்கு உண்டு. இந்நிலையில் ட்விட்டர் பயனர் ஒருவர், "ஐபிஎல் விளையாட்டை பார்க்க ஒரு நாளைக்கு 4 மணிநேரம், 30 நாட்களுக்கு 120 மணிநேரம் வீணாகிறது. அந்த நேரத்தில் ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதற்காக செலவழிக்கப்பட்டிருந்தால் சாத்தியக்கூறுகளை கற்பனை செய்து பாருங்கள். புத்திசாலித்தனமாக உங்கள் நேரத்தை எவ்வாறு முதலீடு செய்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்." என பதிவிட்டுள்ளார். எனினும் இதைபார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.