
'அன்பு மகள்களுக்கு'; தேசிய மகள்கள் தினத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வாழ்த்துப் பதிவு
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேசிய மகள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய மகள்கள் தினம் இன்று (செப்டம்பர் 21) வந்துள்ளது.
இதையொட்டி, இந்தியா முழுவதும் மகள்களை கௌரவிக்கும் வகையில் தேசிய மகள்கள் தினம் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு மகள்கள் தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், "நம் இதயங்களை மகிழ்ச்சியினாலும், நம் வாழ்க்கையை அன்பினாலும் நிரப்பும் மகள்கள் அனைவருக்கும் இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்!" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பதிவில் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா போன்றோர் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் பதிவு
To the one who fills our hearts with joy and our lives with love! 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) September 22, 2024
Wishing all a happy Daughters Day!🥳 #DaughtersDay #WhistlePodu #Yellove pic.twitter.com/dN7jM21Yex