LOADING...
ஐபிஎல் 2026: வாய்ப்பு முடியவில்லை! இது நடந்தா மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்
ம்பை இந்தியன்ஸ் அணிக்கு எஞ்சியுள்ள பிளே-ஆஃப் வாய்ப்புகள்

ஐபிஎல் 2026: வாய்ப்பு முடியவில்லை! இது நடந்தா மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்

எழுதியவர் Sekar Chinnappan
May 03, 2026
11:15 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (மே 2) நடைபெற்ற 'எல் கிளாசிகோ' ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியிடம் மீண்டும் ஒருமுறை படுதோல்வியைச் சந்தித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் சிஎஸ்கேவிடம் வாங்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும். இதற்கிடையே, 9 போட்டிகளில் விளையாடி வெறும் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9வது இடத்தில் தள்ளாடும் மும்பை அணியின் பிளே-ஆஃப் கனவு தற்போது நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

மும்பை பேட்டிங் சொதப்பல்

மும்பையின் பேட்டிங் சொதப்பலும் சென்னையின் நிதானமும்

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் நமன் தீர் (57) மற்றும் ரியான் ரிக்கெல்டன் (37) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 10.3 ஓவர்களில் 99/2 என ஓரளவு வலுவான நிலையில் இருந்த மும்பை, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 159 ரன்களுக்குச் சுருங்கியது. கடினமான ஆடுகளத்திலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (67*) மற்றும் கார்த்திக் சர்மா (54*) ஜோடி மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11 பந்துகள் மீதமிருக்கையிலேயே சென்னைக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது.

பிளே-ஆஃப் கணக்கு

மும்பைக்கு இருக்கும் வாய்ப்புகள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளன. ஒருவேளை மும்பை தனது அடுத்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 14 புள்ளிகளை எட்ட முடியும். ஆனால், 14 புள்ளிகள் என்பது பிளே-ஆஃப் உறுதி என்பதைத் தெரிவிக்காது. கடந்த 8 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள மும்பை அணி, இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளையும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisement

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலை

தற்போது பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் மற்றும் ஆர்ஆர் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் 10 புள்ளிகளுடனும், சிஎஸ்கே 8 புள்ளிகளுடனும் மும்பையை விட முன்னிலையில் இருக்கின்றன. டிசி மற்றும் கேகேஆர் அணிகளும் மும்பைக்கு மேலே உள்ள நிலையில், 4 புள்ளிகள் மட்டுமே வைத்துள்ள மும்பை அணிக்கு ஒவ்வொரு போட்டியும் 'வாழ்வா-சாவா' போராட்டமாகவே அமையும்.

Advertisement

மும்பை

மும்பைக்குச் சாதகமாக நடக்க வேண்டியவை

மும்பை அணி தகுதி பெற வேண்டுமென்றால், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளைத் தவிர, மற்ற எந்த அணியும் 14 புள்ளிகளுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும். குறைந்தது 6 அணிகள் 14 புள்ளிகள் அல்லது அதற்குக் குறைவாக முடித்தால் மட்டுமே, நிகர ரன் ரேட் அடிப்படையில் மும்பை முன்னேற வாய்ப்பு கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மும்பை தனது மீதமுள்ள 5 போட்டிகளையும் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும்.

Advertisement