Loading...
வெலிங்டன் டெஸ்ட் டிரா ஆனதால் பின்னடைவு: 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற எஞ்சிய 6 போட்டிகளிலும் இந்தியா வெல்ல வேண்டும்.

வெலிங்டன் டெஸ்ட் டிரா ஆனதால் பின்னடைவு: 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 702/9 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்திய போதிலும், 5-வது நாளில் டேரில் மிட்செல் (49*) மற்றும் கிளென் பிலிப்ஸ் (26*) ஆகியோரின் தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிவடைந்தது இதனால் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றி பெறும் இந்தியாவின் காத்திருப்பு தொடர்கிறது. இந்த டிரா மூலம் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் கிடைத்த நிலையில், 12 போட்டிகளில் 72 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியாவின் வெற்றி சதவீதம் (PCT) 51.52-லிருந்து 50.00 சதவீதமாகக் குறைந்து புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா(75.00%), ஆஸ்திரேலியா(69.23%) மற்றும் நியூசிலாந்து(66.67%) ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தியாவுக்கு உள்ள ஒரே வாய்ப்பு

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு உள்ள ஒரே வாய்ப்பு

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இந்தியாவுக்கு இன்னும் 6 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன

அதாவது வரும் நவம்பர் 27-ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் மற்றும் 2027 ஜனவரி 21 முதல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவை ஆகும்.

இந்த 6 போட்டிகளிலும் இந்தியா முழுமையாக வெற்றி பெற்றால் மட்டுமே அதிகபட்சமாக 66.67 சதவீத புள்ளிகளை எட்ட முடியும்.

மாறாக ஒரு போட்டியில் டிரா அல்லது தோல்வியடைந்தால் இந்தியாவின் சதவீதம் 61.11 முதல் 62.96 சதவீதமாகக் குறைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை மிகவும் சிக்கலாக்கிவிடும்.

இந்தியாவுக்கு சாதகம்

மற்ற அணிகளின் முடிவுகளும் இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய கட்டாயம்

இந்தியா எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 66.67% புள்ளிகளைப் பெற்றாலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தங்களது எஞ்சிய தொடர்களில் புள்ளிகளை இழந்தால் மட்டுமே இந்தியாவால் முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய முடியும்.

குறிப்பாக நியூசிலாந்துக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருப்பதால், அந்த அணியால் அதிகபட்சமாக 85.42% வரை செல்ல வாய்ப்புள்ளது.

எனவே, வரும் 2027 ஜூன் 9 முதல் 13 வரை லண்டன் 'தி ஓவல்' மைதானத்தில் நடைபெறவுள்ள WTC இறுதிப் போட்டிக்கான கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

ADVERTISEMENT