Page Loader
மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை வென்ற பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்
மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை வென்ற பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்

மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலை வென்ற பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 21, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிரிஜ் பூஷனுக்கு அடுத்தபடியாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மல்யுத்த வீரர்களின் ஆதரவு பெற்ற அனிதா ஷெரானை விட 33 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங். மொத்தம் இருந்த 50 ஓட்டுகளில், 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்த 47 ஓட்டுக்களில் சஞ்சய் சிங் 40 ஓட்டுக்களையும், அனிதா ஷெரான் வெறும் ஏழு ஓட்டுக்களையும் மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராடிய நிலையில், அவரது ஆதரவாளரே தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல்: