
பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய ரோஹன் போபண்ணா ஜோடி
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ஏடிபி 1000 நிகழ்வான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி தோல்வியைத் தழுவியது.
இறுதிப்போட்டியில், மெக்சிகோ-பிரெஞ்சு ஜோடியான சாண்டியாகோ கோன்சாலஸ் மற்றும் எட்வார்ட் ரோஜர்-வாசெலின் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 2-6, 7-5, [7-10] என்ற செட் கணக்கில் போராடி தோற்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் போபண்ணா ஜோடி இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் எனும் நிலையில், தோல்வியைத் தழுவி அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.
இதற்கிடையே, போபண்ணா மற்றும் எப்டனுக்கு இந்த சீசனில் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவுவது இது ஐந்தாவது முறையாகும்.
ட்விட்டர் அஞ்சல்
ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி
PARIS CHAMPIONS 🏆@ERogerVasselin & @gonzalezsanty defeats Bopanna/Ebden 6-2 5-7 10-7 to claim their 5th title this season 👑#RolexParisMasters pic.twitter.com/RVSdgwP9YB
— Tennis TV (@TennisTV) November 5, 2023