மகளிர் டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ராஜினாமா
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப், புதன்கிழமை (மார்ச் 1) கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். பிப்ரவரியில் நடந்த 2023 மகளிர் டி 20 உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.703 உடன் குழு "பி"யில் கடைசி இடத்தையே பிடித்தது. மரூப் 2013 முதல் 2023 வரை 34 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்தார். 2020இல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, தாயாகப் போவதால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய நிலையில், 2022இல் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.