LOADING...
ஐபிஎல் தொடரில் திடீர் கட்டுப்பாடு! 'கேர்ள் பிரண்ட்' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிசிசிஐ அதிரடி முடிவு
கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது BCCI

ஐபிஎல் தொடரில் திடீர் கட்டுப்பாடு! 'கேர்ள் பிரண்ட்' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பிசிசிஐ அதிரடி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
May 04, 2026
01:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிகரித்து வரும் 'கேர்ள் பிரண்ட் கலாச்சாரம்' எனப்படும் வீரர்களின் தோழிகள் மற்றும் கூட்டாளிகள் உடனான பயணங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய ஐபிஎல் 2026 தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுபோன்ற போக்குகள் எதிர்காலத்தில் பெரும் தகவல் கசிவுக்கோ அல்லது விளையாட்டு நம்பகத்தன்மை பாதிப்பிற்கோ வழிவகுத்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 'தைனிக் ஜாக்ரன்' நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பிசிசிஐ சில முக்கிய விதிமாற்றங்கள் செய்யவுள்ளது.

காரணம்

பிசிசிஐ-யின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

கிரிக்கெட் வீரர்களுடன் பயணிக்கும் மற்றும் தங்கும் கூட்டாளிகளில் பலர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் கடந்த காலங்களில் ஆன்லைன் சூதாட்ட மற்றும் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியுள்ளனர். இதனால் அணியின் ரகசியத் தகவல்கள் கசிந்து சூதாட்டப் புகார்களுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. பல முன்னணி வீரர்கள் தங்களது தோழிகளை அணி தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பேருந்துகளில் தங்களுடன் அழைத்துச் செல்வது அணிக்குள் இருக்கும் தொழில்முறை சூழலைப் பாதிப்பதாக பிசிசிஐ கருதுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீடியா மேலாளர் டக் அவுட்டில் மொபைல் போன் பயன்படுத்தியது மற்றும் கேப்டன் ரியான் பராக் புகைபிடித்தது (Vaping) போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை

அதிகாரப்பூர்வ கேர்ள் ஃபிரென்ட்' சர்ச்சையும், ஏசியு பதிலும்

ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொதுவெளியில் காணப்பட்டதைத் தொடர்ந்து பிசிசிஐ இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் படி, வீரர்களுடன் தங்க மனைவிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும, காதலிகளுக்கு இல்லை. அதேபோல அணி பேருந்தில் பெண் தோழிகள் அணியுடன் பயணிக்க முழுத் தடை விதிக்கப்படலாம். இந்திய அணி நீண்ட சர்வதேச சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும்போது மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் தங்குவதற்கு 14 நாட்கள் மட்டுமே அனுமதி உண்டு என்ற கடுமையான விதி 2025-ஆம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டது. அதே போன்ற ஒரு கடுமையான விதியை தற்போது ஐபிஎல்-லிலும் அமல்படுத்த பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Advertisement