Loading...
ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப பிசிசிஐ திட்டம்

ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
04:27 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன. வீரர்கள் தங்குவதற்கான விடுதி அறைகள் மிகச் சிறியதாக இருப்பதுடன், விளையாட்டு மைதானத்தில் வீரர்களுக்கான டிரெஸ்ஸிங் ரூம்கள் சாதாரணக் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கழிப்பறை வசதிகள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது வீரர்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள ஆய்வு

கள ஆய்விற்குப் பிறகே முதன்மை அணி செல்லும் என எச்சரிக்கை

இந்த அடிப்படை வசதிக்குறைபாடுகள் குறித்து பிசிசிஐ தனது கடுமையான கண்டனங்களை ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்களிடம் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தின் போது நேரடியாகத் தெரிவித்துள்ளது.

நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக பிசிசிஐ விரைவில் ஒரு சிறப்புப் பார்வையாளரை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளது.

அவர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அங்குள்ள வசதிகள் திருப்திகரமாக இல்லை என்றால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை அணிக்கு பதிலாக இரண்டாம் தர பி அணியை (B-Team) மட்டுமே போட்டிகளுக்கு அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான வலுவான இந்திய அணி

செப்டம்பர் 19 முதல் தொடங்கவுள்ள இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பிசிசிஐ ஏற்கனவே ஒரு மிக வலுவான அணியை அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த அணியில் திலக் வர்மா துணை கேப்டனாகவும், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் T20 போட்டிகள் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆடவர் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நடப்பு சாம்பியன்

நடப்பு சாம்பியனாகக் களம் இறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட போதிலும், சிறந்த தரவரிசையின் அடிப்படையில் ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதனால் நடப்பு சாம்பியனாகத் தங்களது தங்கப் பதக்கத்தை தக்கவைக்க இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இருப்பினும், வீரர்களின் சுகாதாரம் மற்றும் தங்கும் வசதிகளில் எவ்வித விட்டுக்கொடுத்தலும் செய்ய முடியாது என்பதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதால், ஜப்பான் அமைப்பாளர்கள் உடனடியாக வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT