மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திரை ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 17 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதோடு, அவர்கள் கிரேடு ஏ, பி மற்றும் சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால், இதிலும் அது பின்பற்றப்படும் என தெரிகிறது.
எனினும் ஆடவர் கிரிக்கெட்டில் ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகள் இருக்கும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டில் மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன.
woman players list in central contract of bcci
ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள்
மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஏ கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடு வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடியும் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வீராங்கனைகளின் பட்டியல் பின்வருமாறு :-
கிரேடு ஏ: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா
கிரேடு பி: ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ராஜேஸ்வரி கயக்வாட்
கிரேடு சி: மேக்னா சிங், தேவிகா வைத்யா, சப்பினேனி மேகனா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா