Page Loader
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2024
10:55 am

செய்தி முன்னோட்டம்

தற்போது இந்திய சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது வழக்கமாகி விட்டது. எம்.எஸ்.தோனியில் துவங்கி, மேரி கோம், சாய்னா நேவால், மில்கா சிங் முதல் சமீபத்தில் வெளியான முத்தையா முரளீதரன் வரை பலரது வாழ்க்கையும் திரைப்படமாகி விட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாகவுள்ளது. 'அந்தாதுன்' என்ற படத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தான் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானே இந்த படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை, லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கர்க் ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம், 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post