Page Loader
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2023
02:33 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி மற்றும் இந்தூரில் நடந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த 2023 ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் ரவிச்சந்திரன் விளையாடி வருகிறார்.

axar patel ruled out of 3rd odi vs aus

இந்திய அணியிலிருந்து நீக்கம்

தனது காயத்திற்காக, அக்சர் படேல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்த நிலையில், அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால், புதன்கிழமை (செப்டம்பர் 27) நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். எனினும், சனிக்கிழமை நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அக்சர் படேல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அக்சர் படேல் உடற்தகுதி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதால், அக்சருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டனை பேக் அப் வீரராக களமிறக்க தயார் நிலையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வினை ஒருநாள் உலகக்கோப்பை அணியில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.