AUSvsSA Semifinal : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 215 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெம்பா பவுமா (0) மற்றும் குயின்டன் டி காக் (3) சொற்ப ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து, ஐடென் மார்க்ரம் 10 ரன்களிலும், வான் டெர் டஸ்ஸன் 6 ரன்களிலும் வெளியேற 12 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அணியை மீட்ட டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாசன்
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாசன் தடுமாறிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை மீட்டு ஸ்கோரை உயர்த்தினர். ஹென்றிச் கிளாசன் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்ட நிலையில், டேவிட் மில்லர் பொறுப்புடன் விளையாடி சதமடித்து 101 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.