Page Loader
AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2023
06:44 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர். பவுமா 35 ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், அதன் பின் வந்த வான் டெர் டஸ்ஸன் 26 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து டி காக் மற்றும் ஐடென் மார்க்ரம் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த ஆரம்பித்தனர்.

Australiya need 312 runs to win against south africa

குயின்டன் டி காக் சதம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் அபாரமாக விளையாடி சதமடித்ததோடு, 109 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ஐடென் மார்க்ரமும் அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 50 வர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.