AUSvsPAK : ரோஹித் ஷர்மா-கேஎல் ராகுல் வரிசையில் வரலாறு படைத்த வார்னர்-மார்ஷ் ஜோடி
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் 18வது லீக் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவித்தது.
மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி பாகிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்து இருவரும் சதமடித்ததோடு, முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தனர்.
இதன்மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்கள் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக மாறியுள்ளது.
முன்னதாக, 2011இல் இதே பெங்களூரில் நடந்த உலகக்கோப்பையில் பிராட் ஹாடின் மற்றும் ஷேன் வாட்சன் 183 ரன் எடுத்திருந்ததே அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
David warner mitchell marsh pair creates unique record in AUSvsPAK
டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷின் இரட்டை சதங்கள் சாதனை
டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் நான்காவது ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.
முதன்முதலில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கையின் உபுல் தரங்கா (133) மற்றும் டிஎம் தில்ஷன் (144) ஆகியோர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதமடித்து வரலாறு படைத்தனர்.
அதைத் தொடர்ந்து, அதே 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கையின் தரங்கா (102*) மற்றும் தில்ஷன் (108*) இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை செய்தனர்.
2019 இல் இலங்கைக்கு எதிராக கேஎல் ராகுல் (111) மற்றும் ரோஹித் ஷர்மா (103) இந்த சாதனையை செய்த மூன்றாவது ஜோடியாக மாறியது குறிப்பிடத்தக்கது.