Page Loader
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமத்தின் 4 மாத மகன் மரணம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமத்தின் 4 மாத மகன் மரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2023
10:09 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமது, தனது 4-மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஃபவாத்தின் மகன், பிறப்பிலேயே உடல்நல பாதிப்பு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக, மெல்போர்னில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும், இருப்பினும், சிகிச்சை பலனின்றி, அந்த குழந்தை அக்டோபர் 23 அன்று, இயற்கை எய்ததாகவும் ஃபவாத் அகமத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "துரதிர்ஷ்டவசமாக, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, என் மகன் வலி மற்றும் கடுமையான போராட்டத்தில் தோற்றான்" என்று பதிவிட்டு, தனது மகனின் புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஃபவாத்தின் இழப்பிற்கு தனது இரங்கல்களை பதிவுசெய்தது.

ட்விட்டர் அஞ்சல்

ஃபவாத் அகமத்தின் மகன் மரணம்

ட்விட்டர் அஞ்சல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அஞ்சலி