NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்தியாவுக்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 08, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம், பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

    இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

    ஆஸ்திரேலியா 2023-25 சுழற்சியில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன் 60.71 ரேட்டிங் புள்ளிகளைக் கொண்டுள்ளது.

    தென்னாபிரிக்கா 9 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 59.27 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இந்தியா

    இந்திய கிரிக்கெட் அணியின் இடம்

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா உடனான தோல்விக்குப் பின்னர், 16 போட்டிகளில் 9 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன், அட்டவணையில், 57.29 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற, எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

    மேலும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் எஞ்சிய போட்டிகளின் வெற்றி தோல்விகளும் இந்தியாவின் வாய்ப்பை பாதிக்கும்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இன்னும் 5 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் 3 போட்டிகளில் மட்டும் வென்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

    மறுபுறம், தென்னாப்பிரிக்கா தன்னுடைய எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    இந்திய கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டிராபி

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர் அஸ்வின் ரவிச்சந்திரன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதமடித்து ஹைடனின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் மேட்ச்
    பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர்
    அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட்
    INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா? சஞ்சு சாம்சன்
    இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா

    டெஸ்ட் கிரிக்கெட்

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற கேன் வில்லியம்சன்  நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்; தேவ்தத் படிக்கல் அணியில் சேர்ப்பு? ரோஹித் ஷர்மா
    பார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம் பார்டர் கவாஸ்கர் டிராபி
    கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன் எப்படி? புள்ளி விபரம் இதுதான் ஜஸ்ப்ரீத் பும்ரா

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு  இந்தியா vs ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025