Page Loader
ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2023
07:02 pm

செய்தி முன்னோட்டம்

15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட தற்காலிக அணியில் இடம் பெற்றிருந்த ஆஷ்டன் அகர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, தற்காலிக அணியில் இடம் பெறாத மார்னஸ் லாபுசாக்னே, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில், இடது கை தொடக்க ஆட்டக்காரரும், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சமீபத்திய இந்திய தொடரில் வாய்ப்பை இழந்த டிராவிஸ் ஹெட்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Australia Squad for ODI World Cup 2023

ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா

திருத்தப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஒரே ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஜம்பா மட்டுமே இடம் பெற்றுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும், சமீபத்திய இந்திய தொடரின் கடைசி போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கிளென் மேக்ஸ்வெல் போன்ற பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், இதனால் பின்னடைவு எதுவும் இருக்காது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ், சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.