ATP Finals : ஏடிபி பைனல்ஸ் அரையிறுதிக்கு ரோஹன் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தகுதி
ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) இத்தாலியின் டுரினில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் டுரினில் வெஸ்லி கூல்ஹாஃப் மற்றும் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியை 6-4, 7-6(5) என்ற நேர் செட்களில் வீழ்த்தினர். 43 வயதான போபண்ணா நான்காவது முறையாக ஏடிபி பைனல் போட்டியில் விளையாடி வரும் நிலையில், அவரது ஜோடியான எப்டனுக்கு இது முதல் சீசனாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரட்டையர் பிரிவில் கைகோர்த்த போபண்ணா மற்றும் எப்டன் இருவரும் தோஹா மற்றும் இந்தியன் வெல்ஸில் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.