வெறும் 9 வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடி சாதனை படைத்த சிறுமி
வெறும் ஒன்பது வயதே ஆன மசெல் பாரிஸ் அலெகாடோ திங்களன்று (செப்டம்பர் 25) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கேட்போர்டிங்கில் போட்டியிட்டு புதிய வரலாறு படைத்தார். சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் விளையாட்டுப் போட்டிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்காக பங்கேற்றுள்ள அலெகாடோ, மகளிர் பார்க் ஸ்கேட்போர்டிங்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று, எட்டு பேரில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். மார்ச் மாதம் ஒன்பது வயதை எட்டிய அலெகாடோ, உறவினர் வீட்டில் இருந்தபோது தனது சகோதரர் ஸ்கேட்போர்டிங் செய்வதைப் பார்த்து தானும் அதில் ஈடுபட்டதாகக் கூறினார். ஒரு பெரிய சர்வதேச போட்டியில் பங்கேற்பது பற்றிய தனது உணர்வுகளைப் பற்றிப் பேசிய அலெகாடோ, "நான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்." என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்கேட்போர்டிங்கில் பங்கேற்ற 9 வயது மசெல் பாரிஸ் அலெகாடோ
Youngest finalist with the mightiest spirit! ✨ Mazel Paris Alegado proved herself at the #AsianGames finishing at 7th place in the women's park skateboarding final. Mabuhay, Mazel! 🇵🇭 📸 POC#HangzhouAsianGames pic.twitter.com/z73x9PQN7j— One Sports (@OneSportsPHL) September 25, 2023