Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய்
ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய்

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் டேரியஸ் கினான் செனாய் ஆடவர் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். கினான் செனாய் 32 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீனாவின் யிங் கி 46 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், குவைத்தின் தலாத் அல்ராஷிதி 45 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். முன்னதாக, ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோருடன் இணைந்து ட்ராப் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கினான் செனாய்க்கு இது இரண்டாவது பதக்கமாகும்.

Darius Kynan Chenai wins bronze in individual drop

ட்ராப் அணி பிரிவிலும் ஆடவர் மற்றும் மகளிர் இந்திய அணிகள் பதக்கம் வென்று அசத்தல்

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சுடுதல் ட்ராப் அணி ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோருடன் சேர்ந்து தங்கம் வென்றார். இதற்கிடையில், மகளிர் ட்ராப் அணி போட்டியில், இந்தியாவின் மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.