CSK அணியின் செயல்திறன் மையத்திற்கு தலைமை தாங்குகிறார் அஸ்வின் ரவிச்சந்திரன்
CSK அணி சென்னையில் ஒரு செயல்திறன் மையம் ஒன்றை திறக்கவுள்ளது. இந்த செயல்திறன் மையத்தின் தலைமை பொறுப்பை தற்போது அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு வழங்கியுள்ளது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக கட்டப்பட்டுள்ள இந்த செயல்திறன் மையத்தில், வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, என்ன பயிற்சிகள் வழங்கவேண்டும் என முடிவெடுப்பது அஸ்வின் தான். சிஎஸ்கேயின் செயல்திறன் மையத்திற்கு அஸ்வினுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் விரைவில் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்,"பொதுவாக ஒரு வீரரை ஏலத்தில் எடுப்பது என்பது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அது ஏலத்தின் தன்மை மற்றும் வீரர்களுக்கான வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்து தான் அமைகிறது" எனக்கூறியுள்ளார்.
CSKக்கு திரும்பும் அஸ்வின்
R Ashwin to move to CSK ahead for next IPL? His recent move to India cements sparks speculation#RAshwin #CSK #Ashwin #IndiaCements https://t.co/MC4RYCR6UY— India Today Sports (@ITGDsports) June 5, 2024