Page Loader
ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்
இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்

ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 13, 2023
02:50 pm

செய்தி முன்னோட்டம்

ஆஷஸ் 2023 தொடர் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியனாக சமீபத்தில் முடிசூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்டர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் செயல்திறனை இந்த பதிவில் பார்க்கலாம். இங்கிலாந்தில் 16 டெஸ்டில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித், இதுவரை 6 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 1,727 ரன்கள் குவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். அவரது சராசரி 59.55 ஆகும். இங்கிலாந்தில் ஸ்டீவ் ஸ்மித் 14 ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 65.08 சராசரியில் 1,627 ரன்கள் எடுத்துள்ளார். அவரது எண்ணிக்கையில் ஆறு சதங்கள் அடங்கும்.

david warner performance in england

இங்கிலாந்தில் டேவிட் வார்னரின் செயல்திறன் 

டேவிட் வார்னரை பொறுத்தவரை இங்கிலாந்தில் 14 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 25.74 என்ற சராசரியில் 695 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஏழு அரைசதங்கள் அடங்கும். அவரது மொத்த ரன்களில் 651 ரன்கள் ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர் இங்கிலாந்தில் ஆஷஸ் தவிர விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டி சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஸ்மித் 97 டெஸ்டில் 8,947 ரன்கள் குவித்துள்ளார். வார்னர் 104 டெஸ்டில் 8,202 ரன்கள் எடுத்துள்ளார். இருவரும் இந்த ஆஷஸ் தொடரில் அதிக ரன் குவிக்கும் முனைப்புடன் உள்ளனர்.