
ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர்
செய்தி முன்னோட்டம்
மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் 2023 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு தனித்துவமான சாதனையை செய்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரின் 5வது பந்தில் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
புவனேஷ்வர் குமார், ரஞ்சி டிராபியில் அர்ஜுனின் தந்தை சச்சின் டெண்டுல்கரை டக் அவுட் செய்த முதல் கிரிக்கெட் வீரராகவும், ஒரே ஒருவராகவும் உள்ளார்.
அந்த விக்கெட்டை கைப்பற்றியதும் ஹைதராபாத் மைதானத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தந்தையில் விக்கெட்டை வீழ்த்தியதற்கு பதிலடியாக இருப்பதுபோல் செவ்வாயன்று (ஏப்ரல்18), அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் ஐபிஎல் விக்கெட்டாக புவனேஷ்வர் குமார் அமைந்துவிட்டார்.
arjun sachin tendulkar similar record against kkr
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தனித்துவமான சாதனை
அர்ஜுன் டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார்.
அந்த போட்டியில் அர்ஜுன் இரண்டு ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
மேலும் அவர் வீசிய முதல் ஓவரில் கொல்கத்தா அணி 5 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, ஏப்ரல் 2009 இல் கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல்லில் சச்சின் வீசிய முதல் ஓவரிலும் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
தந்தை மகன் இருவரும் ஐபிஎல்லில் கொல்கத்தாவுக்கு எதிராக தாங்கள் பந்துவீசிய முதல் ஓவரில் ஒரேமாதிரியாக 5 ரன்களை விட்டுக்கொடுத்து ஆச்சரியமூட்டியுள்ளனர்.