
ஆர்க்டிக் ஓபன் 2023 : இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
பின்லாந்தில் உள்ள வான்டா எனர்ஜியா அரினாவில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓபன் 2023 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, காலிறுதிப் போட்டியில் உலகின் 26ஆம் நிலை வீராங்கனையான வியட்நாமின் துய் லின் நுயனை எதிர்கொண்ட பிவி சிந்து, 20-22, 22-20, மற்றும் 21-18 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
சனிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், சீனாவின் வாங் ஸி யியை எதிர்கொள்ள உள்ளார்.
பிவி சிந்து இந்த ஆண்டு 14 BWF உலக டூர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் ஒன்றில் கூட பதக்கம் வெல்லவில்லை. இந்நிலையில், ஆர்க்டிக் ஓபனில் பதக்கம் வென்று மீண்டும் சிறந்த கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
SATURDAY SEMIFINALS 💥
— BAI Media (@BAI_Media) October 13, 2023
PV Sindhu in action tomorrow 🏸🙌#ArcticOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/ey8zMfwisX