துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : 2023இல் முதல் தோல்வியை பெற்ற அரினா சபலெங்கா
ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்ற அரினா சபலெங்கா இந்த ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது முதல் தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் பார்போரா கிரெஜ்சிகோவாவுக்கு எதிராக சபலெங்கா தோல்வியை சந்தித்தார். கிரெஜ்சிகோவாவுக்கு எதிராக 0-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். முன்னதாக அடிலெய்டு இன்டர்நேஷனல் பட்டத்துடன் 2023-ஐ சபலெங்கா வெற்றிகரமாக தொடங்கினார். தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றார். மேலும் சபலெங்கா ஆஸ்திரேலிய ஓபனை நோக்கி தனது கவனத்தைத் திருப்பி, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
அரினா சபலெங்காவின் டென்னிஸ் புள்ளி விபரங்கள்
அடிலெய்ட் இன்டர்நேஷனல் 1ஐ வென்றதன் மூலம், சபலெங்கா தனது 11வது கேரியர் ஒற்றையர் பட்டத்தையும், 2023ல் முதல் பட்டத்தையும் பெற்றார். மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் அவர் 12 பட்டங்களை வென்றார். ஆப்டாவின் கூற்றுப்படி, ஆஸ்திரேலிய ஓபன் சகாப்தத்தில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஐந்தாவது பெண் வீராங்கனை என்ற பெருமையை அரினா சபலெங்கா பெற்றார். இந்த பட்டியலில் முன்னதாக நான்சி ரிச்சி, ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் சோபியா கெனின் ஆகியோர் இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர்.