Page Loader
செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி!
செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ

செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி!

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக சவூதி ப்ரோ லீக்கில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது அல்-நாஸ்ர் கால்பந்து கிளப் அணி திங்களன்று (மே 8) ரியாத்தில் நடந்த போட்டியில் அல்-கலீஜிடம் 1-1 என டிரா செய்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது ரொனால்டோ 58வது நிமிடத்தில் அடித்த கோலை ஆப்சைடு எனக் கூறி நடுவர் ரத்து செய்தார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில் போட்டி முடிந்து ரொனால்டோ டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்ல முயன்றபோது, எதிரணியின் ஊழியர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். ஏற்கனவே கோபத்தில் இருந்த ரொனால்டோ, இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று, செல்ஃபி எடுக்க முயன்றவரை தள்ளி விட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post