பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறுவதாக ஆண்டி முர்ரே அறிவிப்பு
டென்னிஸ் விளையாட்டில் இரண்டு முறை ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே, தனது டென்னிஸ் வாழ்க்கையை அடுத்த வாரம் பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் முடித்துக்கொள்வதாக செவ்வாயன்று அறிவித்தார். அவரின் எக்ஸ் தளத்தில்,"எனது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரிஸ் வந்தேன்" என்று 37 வயதான முர்ரே பதிவிட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டி ரோலண்ட் கரோஸில் சனிக்கிழமை தொடங்குகிறது. ஆண்டி முர்ரே 2012 லண்டன் ஒலிம்பிக்கில் விம்பிள்டனில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் - ரோஜர் பெடரரை மூன்று நேரான செட்களில் அவர் தோற்கடித்தார். மேலும் 2016 இல் ரியோ டி ஜெனிரோவில், ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.