Page Loader
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி நியமனம்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி நியமனம்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 09, 2023
02:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் அலிசா ஹீலியை அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணியின் நீண்ட கால கேப்டன் மெக் லானிங் ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனாக சனிக்கிழமை (டிசம்பர் 9) நியமிக்கப்பட்டார். 33 வயதான அவர் கடந்த ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ள நிலையில், தற்போது முழுநேரமாக இப்பொறுப்பை ஏற்கிறார். இதற்கிடையே, 28 வயதான தஹ்லியா மெக்ராத், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Alyssa Healy appointed as new Australia Women's Cricket Team Captain

வாய்ப்புக்கு நன்றி : அலிசா ஹீலி

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள அலிசா ஹீலி, "கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன். எங்கள் அணியை வழிநடத்தும் வாய்ப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக வீராங்கனைகளின் ஆதரவை நான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்தேன். மேலும் நான் இருக்கும் நிலையில் தொடர்ந்து குழுவை வழிநடத்திச் செல்வதற்கு அவர்களின் ஊக்கம் காரணமாக அமைந்துள்ளது." என்றார். இவர் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் மெக் லானிங் தொடர்ந்து லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்.