
2019க்கு பிறகு முதல்முறை; சோகமான சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 இன் 8வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கடுமையான தோல்வியை சந்தித்தது.
சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில், 2019க்குப் பிறகு முதல் முறையாக பவர்பிளேயில் சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து, சோகமான சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி டாப் ஆர்டர் பெட்டர்களின் அதிரடி ஆட்டத்தால் ஆரம்பத்திலிருந்தே ரன் குவிக்க ஆரம்பித்தது.
இலக்கு
197 ரன்கள் இலக்கு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா மட்டுமே நிலைத்து நின்று 41 ரன்கள் சேர்த்தார்.
மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்து சொதப்பியதால் பின்னடைவை சந்தித்தது. லோயர் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் அணியை மீட்க முயன்றாலும் பலனளிக்கவில்லை.
எம்எஸ் தோனி இறுதியாக 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்ததன் மூலம், தோல்விக்கான ரன் வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.