
இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம்
செய்தி முன்னோட்டம்
நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா அணி அபாரமாக பந்து வீசி, பாகிஸ்தான் அணியினை வென்றது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதைப் பற்றி கேள்விப்பட்டபோது தனது கண்களில் கண்ணீர் வந்ததாக தெரிவித்தார். அவர் இந்தியாவின் பீல்டிங் பதக்கத்தை பந்திற்கு வழங்கினார். அப்போது இந்த சம்பவத்தை பற்றி கூறினார். ரவி சாஸ்திரி, தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீண்டும் ஃபார்மில் இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு இதமாக இருப்பதாகவும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
பீல்டிங் பதக்கம் வென்ற பண்ட்
Ravi Shastri presented the medal to Pant. ❤️#Rishabhpant #Icc #cricket #teaminia pic.twitter.com/1A5SNwGrcZ
— Cricadium CRICKET (@Cricadium) June 10, 2024
மீண்டு வந்த பண்ட்
விபத்திற்கு பின்னர் மீண்டு வந்த ரிஷப் பண்ட்
கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பரில் நடந்த ஒரு எதிர்பாராத கார் விபத்தில் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவர் பலத்த காயமடைந்தார். அது அவரை ஐபிஎல்-2024 வரை ஆட்டமிழக்க வைத்திருந்தது. அதன்பின்னர் மீண்டு வந்த பண்ட், இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு விக்கெட் கீப்பர் பண்ட்-உம் முக்கிய காரணமானார். ரிஷப் பண்ட், 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்டம்புக்கு பின்னால் மூன்று அற்புதமான கேட்சுகளை எடுத்தார். இதனால் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது அபார ஆட்டம் காரணமாக, பீல்டிங் விருது வழங்கப்பட்டது மற்றும் அதை வழங்க சாஸ்திரி சிறப்பு விருந்தினராக ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வருகை தந்தார்.