இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை?
ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் பந்தயத்தில் இன்னும் எட்டு அணிகள் களத்தில் உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மட்டும் படுதோல்வியை சந்தித்து பிளேஆப் வாய்ப்பை முழுமையாக இழந்த அணிகளாக உள்ளன. இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே தற்போது பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த அணியாக உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பிளேஆப் வாய்ப்புகள் குறித்த சில சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிளேஆப் வாய்ப்பு குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா
ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "15 புள்ளிகள் பெற்ற அணிகள் தகுதி பெறலாம். மேலும் 16 புள்ளிகளைப் பெற்றுள்ள அணிகள் பிளேஆப் வாய்ப்பை இழக்கலாம். ஐபிஎல்லிலேயே இந்த சீசன் மிகவும் நம்ப முடியாததாக உள்ளது. சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி இரண்டும் 17 புள்ளிகளை எட்டினால் பிளேஆப்பிற்கு தகுதி பெறும். அல்லது இருவரும் 15 புள்ளிகளுடன் முடிக்கலாம். இந்த சமயத்தில் பிபிகேஎஸ், ஆர்சிபி அல்லது எம்ஐ 16 புள்ளிகளை எட்டினால் தகுதி பெறலாம். அதேநேரத்தில் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி இரண்டும் 17புள்ளிகளை எட்டிய நிலையில், எம்ஐ, பிபிகேஎஸ் மற்றும் ஆர்சிபி 16 புள்ளிகளை எட்டினால், இந்த மூன்று அணிகளில் சிறந்த நிகர ரன்ரேட் கொண்ட அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்." என்றார்.