வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை!
ஆன்லைன் உணவு விற்பனை செயலியான சோமோட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, 'Zomato Everyday' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை உங்களுக்கு ஹோட்டலில் இருந்து உணவை வழங்காமல், வாடிக்கையாளர்கள் தங்கள் உணவை ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. அதாவது, வீட்டு உணவை அதிகமாக விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை Zomato டெலிவரி பாய்ஸ் மூலம் டெலிவரி செய்யுமென்று நிறுவனம் கூறியுள்ளது. வீட்டில் சமைத்த உணவை இனி ஆர்டர் செய்து வாங்கி கொள்ளமுடியும். அதுவும் உங்கள் ஆர்டரை தேர்வு செய்த பின் தான் இந்த உணவை வீட்டிலிருந்து தயாரிக்கப்படும்.
வீட்டு உணவை ருசித்து சாப்பிட Zomato Everyday சேவை - எங்கே கிடைக்கும்?
மேலும், இனி மக்கள் வீடு உணவை வெறும் ரூ.89 முதல் ஆர்டர் செய்யத் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் ஆர்டரைப் பொறுத்து கட்டணம் மாறும். இப்போது இந்த சேவை முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில், இது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சோமோட்டோ வெளியிட்டுள்ள தகவலில், வீட்டில் சமைக்கப்படும் மதிய உணவு வகைகள், மதியம் 3:30 மணி வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, குர்கானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே Zomato everyday சேவை கிடைக்கிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்