Page Loader
உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ!
உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி

உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ!

எழுதியவர் Siranjeevi
Feb 23, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான்கு சக்கர வாகனம் மூல உணவு டெலிவரி பார்த்து அசத்தி வருகிறார். இவரைப்பற்றி ரியல் ஹீரோ என்ற பெயரில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவர் இந்த வேலைக்காக யார் உதவியையும் நாடவில்லை. இந்த தொழிலுக்காக பெரிய பை ஒன்றையும் முதுகில் சுமந்தப்படி பயணிக்கிறார். இவ்வாறு சில சில சிரமங்கள் இருப்பதை உணர்ந்த உடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் இந்த இளைஞருக்கு தங்களால் முடிந்ததை செய்கின்றனர். மேலும், இந்த இளைஞர் சம்மந்தப்பட்ட உணவகத்திற்குள் வருவதற்கு முன்னரே அவருக்கான ஆர்டர் உணவுடன் உணவக ஊழியர் வெளியே வந்து கொடுத்துவிடுகிறார். உண்மையில், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர் இதேபோன்று திறன் குறைப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

உணவு டெலிவரி செய்து அசத்திய இளைஞர்