LOADING...
பணம் மட்டுமே முக்கியமல்ல! ஏஐயால் அசைக்க முடியாத 10 வேலைகள் எவை? ஸ்ரீதர் வேம்புவின் பஞ்ச் பட்டியல்
ஏஐ காலத்திலும் அழியாத 10 வேலைகள்

பணம் மட்டுமே முக்கியமல்ல! ஏஐயால் அசைக்க முடியாத 10 வேலைகள் எவை? ஸ்ரீதர் வேம்புவின் பஞ்ச் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2026
06:19 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எதிர்காலத்தில் உற்பத்தித் திறன் சார்ந்த பல வெள்ளை காலர் வேலைகள் மறைந்து போகக்கூடும் என்று எச்சரித்துள்ளார். ஒருவரின் சுயமரியாதையை வெறும் வருமானம் அல்லது பொருளாதார உற்பத்தியோடு மட்டும் இணைத்துப் பார்த்தால், ஏஐ காலத்தில் அது பெரும் தனிநபர் நெருக்கடியை உருவாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பான பணிகள்

ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடும் 10 பாதுகாப்பான பணிகள்

பணம் மற்றும் உற்பத்தித் திறனைத் தாண்டி, அன்பு, கலாச்சாரம் மற்றும் சமூகத் தேவையுடன் தொடர்புடைய 10 விதமான பணிகளை ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார். இவை ஏஐயால் ஒருபோதும் மாற்றப்பட முடியாதவை என்று அவர் கருதுகிறார். குழந்தைகளைப் பராமரித்தல்: இயந்திரங்களால் வழங்க முடியாத அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு. இளம் மனங்களுக்குக் கற்பித்தல்: வெறும் தகவல்களைத் தாண்டி ஒழுக்கத்தையும் பண்பையும் போதிக்கும் ஆசிரியப் பணி. முதியோர் பராமரிப்பு: முதியவர்களுக்குத் தேவைப்படும் அன்பான கவனிப்பு மற்றும் துணை. விவசாயம்: அதிக சம்பளம் தரும் வேலையைத் துறந்து, மண்ணுடனான பிணைப்புக்காக விவசாயம் செய்தல்.

பாதுகாப்பான பணிகள்

ஸ்ரீதர் வேம்பு குறிப்பிடும் 10 பாதுகாப்பான பணிகள்

வனக் காவலர்கள்: இயற்கையின் மீதான காதலால் காடுகளைப் பாதுகாக்கும் பணி. கோவில் அர்ச்சகர்கள்: கூட்டமே இல்லாவிட்டாலும் தினசரி சடங்குகளை அர்ப்பணிப்புடன் செய்யும் பூசாரிகள். பாரம்பரிய இசைக்கலைஞர்கள்: கூட்டத்திற்காக அன்றி, கலைக்காகத் தொடர்ந்து பயிற்சி பெற்று பாடுபவர்கள். கலைஞர்கள் மற்றும் சிற்பிகள்: கைகளால் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்யும் கைவினைஞர்கள். சமூக சேவை: எவ்வித எதிர்பார்ப்புமின்றி சமூகத்திற்காகப் பணியாற்றும் தன்னார்வலர்கள். பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள்: உடல் உழைப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக விளையாடும் வீரர்கள்.

Advertisement

பொருளாதாரம்

பொருளாதாரமும் உபரி உற்பத்தியும்

ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த விஷ்ணு அகர்வால் என்ற பயனர், "பொருளாதார வருமானம் இன்றி கலை மற்றும் பராமரிப்புப் பணிகள் நீடிக்க முடியாது" என்று வாதாடினார். இதற்குப் பதிலளித்த வேம்பு, "தொழில்நுட்பம் வளரும்போது உற்பத்தி என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது, உபரி உற்பத்தி அதிகமாக இருக்கும். ஆனால், அந்த வளங்களை மக்கள் எவ்வாறு அணுகப்போகிறார்கள் என்பதுதான் சவாலாக இருக்கும்." என்றார். பண்டைய காலத்தில் அரசர்கள் உபரி உணவை மக்களுக்கு வழங்கி, ஆயிரக்கணக்கான கலைஞர்களைக் கொண்டு பெரிய கோவில்களைக் கட்டியதை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

Advertisement

மாறுபட்ட கருத்துக்கள்

உலகத் தலைவர்களின் மாறுபட்ட கருத்துகள்

எலான் மஸ்க் போன்ற தலைவர்கள், எதிர்காலத்தில் மனிதர்களின் உழைப்பே தேவைப்படாத ஒரு காலம் வரும் என்றும், மனிதர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே வேலை செய்வார்கள் என்றும் கருதுகின்றனர். அதே சமயம், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், ஏஐ வேலைகளைப் பறிக்காது, மாறாக மனிதர்கள் செய்யும் சாதாரண வேலைகளை இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு, மனிதர்களை இன்னும் சிறப்பான பணிகளில் ஈடுபடுத்த உதவும் என்று நம்புகிறார். தொழில்நுட்பம் வளரும்போது சமூகத்தின் மதிப்புமிக்க தேடல்கள் மாறும் என்பதே ஸ்ரீதர் வேம்புவின் இறுதி முடிவாக உள்ளது.

Advertisement